மென்பொருள் சுதந்திர தினம் 2021 வெற்றிகரமாக முடிந்தது

மென்பொருள் சுதந்திர தினம் 2021, FOSS இலங்கை மற்றும் Mozilla இலங்கையின் தன்னார்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் உடன் சமூக ஊடகங்கள் மூலம் கீழே உள்ள முக்கிய விருந்தினர் பேச்சாளர்கள் உடன் 18 செப்டெம்பர் 2021 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

Dr.ஸ்ரீநாத் பெரேரா (Chief Architect at WSO2 – Apache அறக்கட்டளை உறுப்பினர்) அவர்கள், முன்னணி மென்பொருள் ஆர்க்கிடெக்சர் பற்றிய தனது அறிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் அந்த நாளுக்கான தகுதியான தொடக்கத்தை அளித்தார்.


Mr. அனுராத ரத்னவீர (IT consultant) அவர்கள் FOSS அமைப்புகளை பாதுகாப்பது பற்றி பேச எங்களுடன் கலந்து கொண்டார். நமது அறிவை விரிவுபடுத்த அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.


Mr.கலிங்க அத்துலத்முடலி (Co-Founder TES.lk – Founder Techකථා) அவர்கள் திறந்த மூலத்துடன் தொழில் வாய்ப்புகளை பற்றி விவாதிக்கவும், தொழில் வாய்ப்புகள் மற்றும் நாம் என்ன மேம்படுத்த வேண்டும் என்பதை பற்றி கலந்துரையாடினார். இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.


Mr. கயான் பெரேரா (Software Architect & Eclipse contributor) அவர்கள் Eclipse IDE மற்றும் அதை சுற்றியுள்ள திறந்த மூல சூழலைப் பற்றி சிறந்த அறிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டார் மேலும் அவர் சூழலை பற்றி தெளிவான புரிதலை நமக்குத் தந்தார்.


Mr.சஞ்சீவ மலகொட (Associate Director Engineering and Software Architect – WSO2) அவர்கள் திறந்த மூல தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை பற்றி பேசினார் மற்றும் அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.


Mr.ரூபன் ரங்கநாத (Associate Tech Lead – DevOps at Sysco Labs) அவரது அறிவினை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த அமர்வும் முக்கியமாக இருந்தது.

கல்வியிலும், அரசாங்கத்திலும், வீட்டிலும், வியாபாரத்திலும் குறுகிய எல்லா இடங்களிலும் உயர்தர FOSS பயன்படுத்துவதன் நன்மைகளைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கும் இலக்கை நாங்கள் அடைந்தோம்.

மென்பொருள் சுதந்திர தினம் 2021 மதிப்புமிக்க பேச்சாளர் அமர்வுகளால் நிறைந்திருந்தது மற்றும் FOSS.lk இன் குரல் போட்காஸ்ட் அன்றைக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை அளித்தது.

கிளப் ஹவுஸ் அமர்வு திரு.லஹிரு மதுசங்க , திரு.கசுன் விதானகே , திரு தனுஷ்க சந்தனா மற்றும் திரு. ருவன் சேனநந்தன ஆகியோரால்”what to expect at software freedom Day 21 organized by FOSS Sri Lanka”என்ற நிகழ்ச்சித்திட்டம் நடத்தி வைக்கப்பட்டது.

அதுபோல சில சுவாரஸ்யமான பொழுதுபோக்கு தருணங்கள் அந்த நாளை இன்னும் அழகூட்டின.

2021 மென்பொருள் சுதந்திர தினத்திற்கு இணையாக Facebook , Instagram மற்றும் Twitter. இல் நடத்தப்பட்ட சமூக ஊடக போட்டியின் மூலம் வெற்றியாளர்கள் கீழ்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • Facebookபோட்டியின் வெற்றியாளர்- ஹஷினி சேனநாயக்க
  • Instagram போட்டியின் வெற்றியாளர்- நவேத்யா டயலாத்
  • Quiz 1 வெற்றியாளர்- நவீன் தமிந்து
  • Quiz 2 வெற்றியாளர்- கனிஷ்க இந்திரஜித்
  • Quiz 3 வெற்றியாளர் -நெத்மா தனஜ்ஜனி

இவ்வாறு வளரும் மென்பொருள் சுதந்திர தினம் 2021 இறுதியாக முடிவடைகிறது YouTube இல் SFD 2021 பார்க்க இங்கே கிளிக் செய்யவும் click here.

Original article by Tyni Egoda Gedarage – Uva Wellassa University

Translated by Fathima Israth – South Eastern University of Sri Lanka

Author

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.